ஊடகத்துறை கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் சுதந்திரமாகவே செயற்பட வேண்டும். இருந்தபோதிலும் அவை தமக்கென தனித்தன்மை வாய்ந்த சட்டதிட்டங்களையும் கோட்பாடுகளையும் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் அதன் செயற்பாடுகள் சமூக நலன் கருதிய கட்டுப்பாடுடைய பரந்து விரிந்த ஊடகமாக பரிணமிக்கும். ஆனால், துரதிர்ஸ்டவசமாக இலங்கையில் தொலைக்காட்சி மட்டுமின்றி வெகுஜன தொடர்பு சாதனங்கள் அனைத்துமே ஏதோவொரு வகையில் சார்புத்தன்மை மிக்கவையாகவே காணப்படுகின்றன. பொதுவாக அதன் செயற்பாட்டுத் தளத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகநலன், தேசப்பற்று போன்ற இன்னோரன்ன பல விடயங்களை மையமாகக் கொண்டே இவை செயற்படுகின்றன.
அந்த வகையில் இக்கட்டுரையானது, இலங்கையின் தொலைக்காட்சி அலைவரிசைகளின் சார்பு நிலைகள் சிலவற்றையும், அதற்கான காரணங்களையும் சுருக்கமாகக் கூறுகின்றது.
இலங்கை தொலைக்காட்சிகளில் மத்தியதர வர்க்கச் சார்பு, நகர்ப்புறச்சார்பு, மேலை நாடுகளின் சார்பு, பெரும்பான்மை மதச்சார்பு, பெரும்பான்மை இனச்சார்பு, ஆணாதிக்கச்சார்பு என்பவை பெரும்பாலும் காணப்படுகின்றன.
தொலைக்காட்சி உட்பட அனைத்து வெகுஜன தொடர்பு சாதனங்களும் மத்தியதர வர்க்கத்தினரை சந்தோசப்படுத்தும் அல்லது திருப்திப்படுத்தம் வகையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. இது தொடர்பாக நோக்கும் போது ஆய்வாளர்களால் மூன்று விடயங்கள் தெளிவாக சொல்லப்படுகின்றன. இந்த வர்க்கத்தினரிடமே அதிகளவில் தொடர்பு சாதனங்களை உபயோகிக்கும் சக்தி இருக்கிறது. பெரும்பாலான விளம்பரங்கள் இவ்வர்க்கத்தை குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. இதில் பணியாற்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் இவ்வர்க்கத்தைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். எனவே இவ்வர்க்கத்தினர் உலகை எப்படிப் பார்க்கின்றார்களோ அப்படியே செய்திகளும் நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்படுகின்றன.
தொலைக்காட்சி உட்பட தொடர்பு சாதனங்கள் அனைத்திலும் நகர்ப்புறச் சார்பை காணமுடிகிறது. பெரும்பாலான தொடர்பு சாதனங்களின் அனுகூலங்கள் நகர்ப்பகுதியிலேயே இருப்பதும் செய்திகளை சேகரிக்கவும் நிகழ்ச்சிகளை தயாரிக்கவும் எளிதாக இருப்பதும் இதற்கான காரணங்களாக உள்ளன. அத்தோடு கிராமத்தவர்களை விட வாசிப்புத்திறன், வருமான மட்டம் என்பன நகர்ப் புறத்தவர்களிடையே அதிகமாக காணப்படுவதும், இவர்களே தொலைக்காட்சியை அதிகளவில் பயன் படுத்துபவர்களாக இருப்பதும் இந்நகர்ப்புறச் சார்புக்கான காரணமாக உள்ளது.
கீழைத்தேய நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கை காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கில மோகமும் மேற்குலக நாடுகளின் கலாசாரத் தாக்கமும் இன்னும் நிலைத்திருக்கின்றன. உலகமயமாக்கத்தின் காரணமாக இதன் தாக்கம் மேலும் அதிகரித்து வருகின்றது. கிளின்டன் - மோனிக்கா சர்ச்சை, டயானா விவகாரம், ஒசாமா பின்லேடன், சதாம் உசைன் விவகாரம் முதல் இன்று ஏற்பட்டுள்ள அமெரிக்க - ஈராக் - ஈரான் பிணக்குகள் வரை பல்வேறு மேல் நாட்டு விடயங்கள் எம்மை வந்தடைவதற்கும் அதன்பால் எமது நாட்டம் செல்வதற்கும் வழியேற்படுத்துவது இம்மேல் நாடுகள் சார்பான நிகழ்ச்சிகளேயாகும். ஆகவே, உலகச் செய்திகளை சேகரித்துத் தருவதும் அதனால் மக்கள் ஈர்க்கப் படுவதும் அதன் நீடிப்புத் தன்மைக்கு வழிவகுத்துள்ளது.
அரச அங்கீகாரம் பெற்ற பெரும்பாலான தொலைக்காட்சிகள் இலங்கையில் குறிப்பிட்டதொரு பெரும்பான்மை இனக்குழுவினரால் பின்பற்றப்பட்டு வரும் பௌத்த மதத்திற்கே சார்பாக உள்ளன. ஏனைனில், அவற்றில் பணியாற்றுவோரில் அதிகமானவர்கள் அம்மதத்தைச் சார்ந்தவர்களே. குறிப்பாக சுயாதீன தொலைக்காட்சி, ரூபவாஹினி, சனல் ஐ, சுவர்ணவாஹினி, சிரச, தெரண போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் பூரணை தினங்கள் பௌத்த மத விசேட தினங்கள் போன்றவற்றில் அதிகளவான நேரத்தை பௌத்த மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கே ஒதுக்குகின்றன.
குறிப்பிட்டதொரு தினம் வேறு மதத்தினருக்கும் வேறு மதத்தினருக்கும் விசேட தினமாக இருக்கும் பட்சத்தில் கூட இது கவனிக்கப் படுவதில்லை.
இதற்கு அண்மைக்கால சிறந்த எடுத்துக்காட்டு - 2006 ஏப்ரல் மாதம் 13ம் திகதி இலங்கையில் மட்டுமின்றி உலகில் வாழும் கத்தோலிக்க, கிறிஸ்தவர்களின் புனித தினமாகிய பெரிய வெள்ளிக்கிழமைக்கு முந்திய தினமாகிய வழிபாட்டுக்குரிய பெரிய வியாழக்கிமையாகும். இதே தினம் பூரணை தினமுமாகும். இத்தினமானது இரண்டு மதங்களுக்குமான விசேட தினமாக இருந்த போதிலும் பூரணை தினமாக மட்டுமே அடையாளப் படுத்தப்பட்டு அதிகமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. அதேபோன்று அதற்கு இரு தினங்கள் முந்திய 2006 ஏப்ரல் 11 இஸ்லாமியரின் ‘மீலாதுள் நபி’ தினமாகும். ஆனால் அத்தினத்திற்கான நிகழ்ச்சிகளும் அதிகமாக ஒளிபரப்பாகவில்லை.
பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கையில் குறிப்பிட்டதொரு இனம் அதிகமாக வாழ்கின்றது. அதனால். ஏற்பட்டிருக்கும் அரசியல் சாதக நிலைமையால் ஜனநாயக ரீதியில் அதுவே ஆட்சியமைக்கின்றது. ஒன்றோடொன்று தொடர்புபட்ட இக்காரணங்களால் அவ்வினம் சார்ந்தே அதிகமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. வர்த்தக நோக்கம் கருதியதாக இவை இவ்வாறு இடம்பெறுகின்றன என்று சொல்லப்படுகின்ற போதிலும், அதற்கப்பால் உள்ள இனத்துவம் மற்றும் அரசியல் சார் சிக்கல்களே இதற்கான முக்கிய காரணமென்று ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
இலங்கை ஆணாதிக்க சமூக அமைப்பை கொண்டிருப்பதால் தொலைக்காட்சி மட்டுமின்றி தொடர்பு சாதனங்கள் அனைத்துமே ஆணாதிக்க சார்புடையனவாக உள்ளன. தொலைக்காட்சி தயாரிப்புத் துறையில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவு. அதனால் பெண் பற்றிய ஆண்களின் கருத்தியல்களுக்கு அமைவாகவே நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. பெண்களை இரண்டாம் நிலையானவர்களாக கருதும் போக்கே காணப்படுகிறது. குறிப்பாக பாலியல் பலாத்காரம், அடிமைத்தனம், வீட்டுக்கு மட்டுமே உரியவள், கணவனுக்குக் கட்டுப்பட்டவள் போன்ற பல்வேறு பட்ட கருத்தியல்கள், பழமொழிகள் ஊடாக பெண்களை ஓர் குறிப்பிட்ட வட்டத்திற்கு உட்பட்டவளாக ஆணாதிக்க சார்பினை நிலை நிறுத்தி வருகின்றனர்.
இவ்வாறாக நோக்கும் போது இலங்கை தொலைக்காட்சிகளில் சார்புநிலை என்பது பிரித்தெடுக்க முடியாத வகையில் ஆழ வேரூன்றி விட்டது என்றே கருத வேண்டியுள்ளது. இந்நிலை தொடரும் போது அது ஆரோக்கியமான தொலைக்காட்சித் துறை வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமையும் என்பது சுதந்திரமான ஆய்வுகளின் மூலம் பெறப்படும் தெட்டத் தெளிவான உண்மையாகும்.
எஸ். மோசேஸ்
இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - சார்பு நிலை.